ஒரு குழந்தை பிறந்தது முதல் அம்மா, அப்பாவிடம் இருந்து கற்றுக் கொள்கிறதோ இல்லையோ, தொலைக்காட்சியிலிருந்து நிறைய கற்றுக் கொள்கிறது. ஒரு வயது, இரண்டு வயதிலேயே தொலைக்காட்சியில் ஒலிக்கும் சினிமாப் பாடல்களுக்கு தனது பிஞ்சுக் கை, கால்களை அசைத்து நடனமாடக் கற்றுக் கொள்கிறது.
பள்ளியில் சேர்ந்த பின்னால், பள்ளியில் நடைபெறும் விழாக்களில், கலை நிகழ்ச்சிகளில் திரைப்பட பாடல்களுக்கு - அதுவும் குத்துப் பாடல்களுக்கு நடனமாடுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று நினைத்தார் மு.மகேந்திர பாபு. அவர் மதுரை அருகே உள்ள இளமனூர் கிராமத்தில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர்.
பள்ளி மாணவர்கள் பாடி, ஆடுவதற்காக ஒரு பாடல் குறுந்தகடை
"மரமும் மனிதமும்' என்கிற பெயரில் உருவாக்கி வெளியிட்டிருக்கிறார். இதைப் பற்றி அவரிடம் கேட்டோம்:
""பள்ளி மாணவர்கள் குத்துப் பாடல்களுக்கு நடனமாடுவதைப் பார்க்கும்போது ஓர் ஆசிரியர் என்கிற முறையில் எனக்கு மிகுந்த மன வேதனை ஏற்பட்டது.
சினிமாப் பாடல்களைக் கேட்கும், பாடல் காட்சிகளைப் பார்க்கும் சூழலிலேயே குழந்தைகள் சிறுவயதில் இருந்தே வளர்ந்து வருகிறார்கள். சினிமாப் பாடல்களுக்கு ஆடுவதைப் பெற்றோரும் ஊக்கப்படுத்துகிறார்கள்.
இந்த நிலையை மாற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி கற்பதன் அவசியம், உடல் உறுப்பு தானம் போன்ற நல்ல கருத்துகளை பாடல்களாக எழுதினேன். பாடல்களுக்கு மெட்டும் போட்டேன்.
உடனே இந்தப் பாடல்களைப் பாட எங்கள் பள்ளியின் இசை ஆசிரியர் ஜெ.சண்முக வேல் முன் வந்தார். ஆசிரியர்கள் அருள் பாண்டியன், கருத்தப்பாண்டியன், இராஜதுரை, கிறிஸ்டோபர் எல்லாரும் பாடல்களைப் பாட ஆர்வமாக முன் வந்தனர்.
கல்லூரி மாணவிகள் மோனிகா ஜுனோ, ப்ரைசி நிசியும், என் மகள் சஹானாவும் கூட பாடகிகளாக மாறினர். இசை ஆசிரியர் ஆண்ட்ரூஸ், பிரியா மீடியா சுதாகர் எல்லாரும் உதவி செய்தனர்.
இவ்வாறு எல்லாருடைய கூட்டு முயற்சியாலும் இசை ஆல்பம் தயாராகிவிட்டது. கம்ப்யூட்டர் இசையைப் பயன்படுத்தாமல், இசைக் கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர்களை அழைத்து வந்து வாசிக்க வைத்தோம்.
இப்போது மதுரை மாவட்டங்களில் பல பள்ளிகளில் நடைபெறும் விழாக்களில் இந்தப் பாடல்களைப் பாடி மாணவ, மாணவியர் நடனமாடுகிறார்கள். பல பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் இந்த இசைக் குறுந்தகடை ஆர்வமாக வாங்கிச் சென்று பரப்புகின்றனர். வெளியிட்டு இரண்டு மாதங்களுக்குள்ளாகவே 500 குறுந்தகடுகள் விற்பனையாகிவிட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
மிகப்பெரிய சினிமா, தொலைக்காட்சி ஊடகங்களின் ஆற்றலுடன், அவை ஏற்படுத்தும் தாக்கத்துடன் ஒப்பிட்டால் எங்களுடைய முயற்சி, ஒரு மிக மிகச் சிறிய முயற்சி. என்றாலும் குத்துப் பாடல்களுக்கு மாணவர்கள் ஆடுவதைத் தடுக்க அதற்கு மாற்றான பாடல்களை நாங்கள் தந்தோம் என்பதில்
எங்களுக்கு மனநிறைவு ஏற்பட்டுள்ளது'' என்றார் மு.மகேந்திரபாபு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


